ரோஹித் சர்மாவின் இன்றைய சாதனை துளிகள்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா தனது 21வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 21-வது சதத்தை கடந்த 4-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஹசிம் அம்லா 116 இன்னிங்சிலும், விராட் கோலி 138 இன்னிங்சிலும், ஏபி டி வில்லியர்ஸ் 183 இன்னிங்சிலும் 21 சதங்கள் அடித்து முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

ரோகித் சர்மா இந்த சதத்துடன் 186 இன்னிங்ஸ் உடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 200 இன்னிங்ஸ் உடன் 5-வது இடத்தில் உள்ளார்.

இதுதவிர தொடக்க வீரராக களமிறங்கி 19 சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம்பிடித்துள்ளார்.

மேலும் 2013-ம் ஆண்டு ஜனவரிக்குப் பின் அதிக சதங்கள் விளாசியர் பட்டியலில் 2-வது இடம்பிடித்துள்ளார்.

தொடர்ச்சியாக 9 தொடர்களில் சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

  1. சாம்பியன்ஸ் டிராபி
  2. இலங்கையில் நடைபெற்ற தொடர் (2 சதங்கள்)
  3. இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா தொடர்
  4. இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்து தொடர்
  5. இந்தியாவில் நடைபெற்ற இலங்கை தொடர்
  6. தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற தொடர்
  7. இங்கிலாந்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடர்
  8. ஆசிய கோப்பை
  9. இந்தியாவில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers