மேற்கிந்திய தீவுகளை புரட்டியெடுத்த ரோஹித் ஷர்மா மற்றும் அம்பத்தி ராயுடு! 377 ஓட்டங்கள் குவித்த இந்திய அணி

Report Print Kabilan in கிரிக்கெட்

ரோஹித் ஷர்மா, அம்பத்தி ராயுடுவின் அபார சதத்தால் இந்திய அணி 377 ஓட்டங்கள் குவித்துள்ளது.

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி, துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அதன்படி ரோஹித் ஷர்மா-தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், தவான் 38 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் கோஹ்லி களமிறங்கினார். தொடர்ச்சியாக 3 சதங்கள் அடித்திருந்த கோஹ்லி, இந்தப் போட்டியிலும் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், 16 ஓட்டங்களிலேயே அவுட் ஆனார்.

அவரைத் தொடர்ந்து 3வது விக்கெட்டுக்கு அம்பத்தி ராயுடு களமிறங்கினார். இருவரும் மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். 60வது பந்தில் அரைசதம் அடித்த ரோஹித் ஷர்மா, அதன் பின்னர் அதிரடியை வெளிப்படுத்தினார்.

AFP

அவருக்கு இணையாக அம்பத்தி ராயுடுவும் அதிரடியில் இறங்கினார். இந்நிலையில், ரோஹித் ஷர்மா 98 பந்துகளில் சதம் விளாசினார். இதன்மூலம், இந்திய அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது.

மேற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சாளர்களினால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. தொடர்ந்து அதிரடி காட்டிய ரோஹித் ஷர்மா 7வது முறையாக 150 ஓட்டங்களை கடந்தார். பின்னர், 137 பந்துகளில் 20 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 162 குவித்திருந்த ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து, டோனி களமிறங்கினார். இதற்கிடையில் அரைசதம் கடந்திருந்த அம்பத்தி ராயுடு 80 பந்துகளில் 4 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். அதற்கு அடுத்த பந்திலேயே அவர் ரன்-அவுட் ஆனார்.

அப்போது இந்திய அணி 344 ஓட்டங்கள் குவித்திருந்தது. பின்னர் அதிரடி காட்டிய டோனி 15 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 23 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவருக்கு பின்னர் களமிறங்கிய கேதார் ஜாதவ் 7 பந்தில் 16 ஓட்டங்கள் எடுக்க, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 377 ஓட்டங்கள் குவித்தது. மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் கேமர் ரோச் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

AFP

PTI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers