சங்ககாராவின் சாதனையை சமன் செய்ய தவறிய கோஹ்லி

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, 4வது ஒருநாள் போட்டியில் விரைவிலேயே ஆட்டமிழந்ததால், இலங்கை ஜாம்பவான் சங்ககாராவின் சாதனையை சமன் செய்ய தவறிவிட்டார்.

இந்தியா-மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடி வருகிறது.

தவான் 38 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, அணித்தலைவர் விராட் கோஹ்லி களமிறங்கினார். கடந்த மூன்று போட்டிகளிலும் கோஹ்லி சதம் விளாசியிருந்தார்.

இந்த போட்டியிலும் சதம் அடித்தால், சர்வதேச அளவில் தொடர்ச்சியாக 4 சதங்கள் விளாசிய வீரர் எனும் பெருமையை பெறுவார். இதன்மூலம், இலங்கை முன்னாள் வீரர் சங்ககாராவின் இந்த சாதனையை கோஹ்லி சமன் செய்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக ரோச்சின் பந்துவீச்சில் 16 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கோஹ்லி ஆட்டமிழந்ததால், அந்த சாதனையை தவறவிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers