அவுஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்த பாகிஸ்தான்! கடைசி டி20-யிலும் அபார வெற்றி

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், பாகிஸ்தான் அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

பாகிஸ்தான்-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி துபாயில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

தொடக்க வீரர்களான பாபர் அஸாம் 50 ஓட்டங்களும், பர்ஹான் 39 ஓட்டங்களும் குவித்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த சோயிப் மாலிக் 18 ஓட்டங்களில் அவுட் ஆனார்.

20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்கள் எடுத்தது. முகமது ஹபீஸ் அதிரடியாக 20 பந்துகளில் ஒரு சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

பின்னர் விளையாடிய அவுஸ்திரேலியா அணியின் வீரர்கள், பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 19.1 ஓவர்களில் 117 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதனால் பாகிஸ்தான் அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அவுஸ்திரேலிய தரப்பில் பென் மெக்டெர்மோட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் 21 ஓட்டங்களும், அலெக்ஸ் கேரி 20 ஓட்டங்களும் எடுத்தனர்.

பாகிஸ்தானின் ஷதாப் கான் 3 விக்கெட்டுகளும், ஹசன் அலி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது.

Getty Images
AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers