என் பேட்டிங் குறித்து பேச விரும்பவில்லை: விரக்தியில் கூறிய கோஹ்லி

Report Print Kabilan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறித்து, இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

புனேவில் நேற்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்தப் போட்டியில், இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி சதம் விளாசி, ஒற்றை ஆளாய் போராடினார்.

ஆனால், மற்ற வீரர்கள் பெரிதாக ஓட்டங்கள் குவிக்காததால் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில், தோல்வி குறித்து விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘நாங்கள் நன்றாக பந்து வீசினோம். 35 ஓவர்கள் வரை பிட்ச் உதவவில்லை. பின்பகுதியில் கடினமானது. 250-260 ஓட்டங்களைத் தான் விரட்டியிருக்க வேண்டும் அதிகபட்சமாக.

கடைசி 10 ஓவர்களில் ஓட்டங்களை கொடுத்து விட்டோம். அது தவிர பந்துவீச்சு நன்றாகவே இருந்தது. துடுப்பாட்டத்தில் கூட்டணிகள் அமையவில்லை. இப்படி எப்போதும் ஆகாது. பீல்டிங்கில் நன்றாக செயல்பட்டோம். எங்கள் திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை.

என் பேட்டிங் பற்றி பேச விரும்பவில்லை. இந்தப் போட்டியில் எதை நாங்கள் நன்றாக செய்யவில்லையோ, அதைப்பற்றி கவனம் செலுத்த வேண்டும். நான் மர்லன் சாமுவேல்ஸ் பவுலிங்கில் அடித்து ஆட சென்றேன்.

ஆனால் சரியாக அடிக்கவில்லை. வெற்றி, தோல்வி இரண்டையும் எங்களுடையதாக எடுத்துக்கொள்கிறோம். ஒருநாள் மோசமானதாக அமைந்துவிட்டது. திட்டங்களை இன்னும் கொஞ்சம் நன்றாக செயல்படுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்