முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர்! விராட் கோஹ்லி படைத்த வியக்கவைக்கும் சாதனைகள்

Report Print Raju Raju in கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முச்சதம் அடித்த முதல் இந்தியா் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணித் தலைவர் கோஹ்லி சதமடித்தார்.

ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் சதமடித்து வியக்க வைத்தார் கோஹ்லி.

போட்டியில் தோல்வி ஏற்பட்டாலும் கோஹ்லியின் சாதனைப் பட்டியல் தொடா்ந்த வண்ணம் உள்ளது.

  • ஒருநாள் போட்டிகளில் 49 அரைசதம்,
  • மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 10 அரைசதம்,
  • ஒருநாள் போட்டிகளில் 38வது சதம்,
  • ஒரே ஆண்டில் (2018) 6 சதம்,
  • மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக தொடா்ந்து 4வது சதம்,
  • நடப்பு தொடரில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் சதம்,
  • முச்சதம் அடித்த முதல் இந்தியா்,
  • இந்த ஆண்டில் அதிக ரன் அடித்த வீரா் பட்டியலில் முதல் இடம்,

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers