இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய மேற்கிந்திய தீவுகள்!

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஹெட்மையரின் அபார சதத்தால் மேற்கிந்திய தீவுகள் அணி 322 ஓட்டங்கள் குவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்த மேற்கிந்திய தீவுகள், முதல் ஒருநாள் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணியில் கிரன் பவுல் மற்றும் ஹேம்ராஜ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

அதிரடியில் மிரட்டிய கிரன் பவுல் 39 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸருடன் 51 ஓட்டங்கள் விளாசினார். ஹேம்ராஜ் 9 ஓட்டங்களிலும், சாமுவேல்ஸ் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

விக்கெட் கீப்பர் ஹோப் 32 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய ஹேட்மையர், இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக விளாசிய அவர் வேகமாக அரைசதம் கடந்தார்.

அவருக்கு பக்கபலமாக ரோவ்மான் 22 ஓட்டங்களும், ஹோல்டர் 38 ஓட்டங்களும் எடுத்தனர். இந்நிலையில், சதம் விளாசிய ஹேட்மையர் 78 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 106 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த பிஷூ 22 ஓட்டங்களும், கேமர் ரோச் 26 ஓட்டங்களும் எடுக்க மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ஓட்டங்கள் குவித்தது.

இந்திய அணி தரப்பில் சஹால் 3 விக்கெட்டுகளும், ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்