கோஹ்லியுடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிறது: ஏபி டிவில்லியர்ஸ்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி சிறந்த தலைவராகவும், துடுப்பாட்ட வீரராகவும் திகழ்வதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரரான டிவில்லியர்ஸ், வெளிநாடுகளில் நடைபெற்று வரும் டி20 லீக் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்று அளித்த டிவில்லியர்ஸ், ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணியில் தன்னுடன் இணைந்து விளையாடிய விராட் கோஹ்லியை பாராட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், ‘விராட் கோஹ்லியும், நானும் ஐ.பி.எல்-லில் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். இருவரும் ஒன்றாக துடுப்பாட்டம் செய்யும் போது ஒருவித கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிறது.

போட்டியை அணுகும் விதத்தில் இரண்டு பேருக்குமே ஒரே மாதிரியான மனநிலை இருக்கிறது. இப்படி ஒரே மனநிலை கொண்ட இரண்டு பேர் புரிந்துகொண்டு விளையாடுவது மகிழ்ச்சியானது.

அவருக்கு கால்பந்து வீரர் ரொனால்டோவை பிடிக்கும். அவரை அப்படியே விட்டுவிடுவோம். எனக்கு மெஸ்சியை பிடிக்கும். கேப்டன் ஆன பிறகு, கடந்த சில ஆண்டுகளாக தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வளர்ந்திருக்கிறார் விராட்.

அவர் சிறந்த கேப்டன். அதுதான் பயமான பகுதி. துடுப்பாட்ட வீரராகவும் அவர் சிறப்பாக முன்னேறியிருக்கிறார். அதுவும் பயங்கரமானதுதான். அவருக்கு சிறப்பான இடம் இருக்கிறது. இங்கிலாந்து தொடரில் இந்திய அணி விளையாடியது பற்றி கேட்கிறார்கள்.

அந்த அணிக்கு கடுமையான போட்டியை இந்திய அணி அளித்தது என்பது உண்மை. அவுஸ்திரேலியா தொடரில் இந்திய அணி வெல்ல வாய்ப்பிருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...