மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்திய அணி அறிவிப்பு

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் முதல் ஒருநாள் போட்டியில் மோதும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்கிறது.

இரண்டு டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், நாளை முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

இப்போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் வருமாறு:

விராட் கோலி (அணித்தலைவர்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, அம்பதி ராயுடு, ரிஷப் பன்ட், டோனி(கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாகல், உமேஷ் யாதவ், முகமது ஷமி, கலீல் அகமது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்