ஐபிஎல் அணி வீரர்கள் பட்டியலில் மாற்றம்: வியாபாரத்தை துவங்கிய அம்பானி

Report Print Kavitha in கிரிக்கெட்

ஐபிஎல் அணிகள் வரும் நவம்பர் 15க்குள் தற்போதுள்ள தங்கள் வீரர்கள் பட்டியலில் வேண்டாத வீரர்களை ஒப்பந்தத்தில் இருந்து விலக்கிவிட்டு மற்ற அணிகளிலிருந்து நீக்கப்பட்ட வீரர்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற வியாபாரத்தை தொடக்கியுள்ளது.

வியாபாரத்தில் முகேஷ் அம்பானியின் (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்) மும்பை இந்தியன்ஸ் அணி 2019 சீசனுக்கான முதல் வியாபாரத்தை துவங்கி வைத்துள்ளது.

இந்த முதல் வியாபாரத்தில், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தென்னாபிரிக்காவின் க்விண்டன் டி காக்கை, அவரது 2018 ஏல மதிப்பான 2.8 கோடிக்கே மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த மதிப்பை ஈடுகட்ட தங்கள் அணியில் இருந்த இலங்கையின் அகிலா தனஞ்ஜெயா ( 50 லட்சம்) மற்றும் வங்கதேசத்தின் முஸ்தாபிசூர் ரஹ்மான் ( 2.2 கோடி) ஆகியோரை ஒப்பந்தத்தில் இருந்து விடுவித்துள்ளது.

மேலும் இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன், ஆதித்ய தாரே ஆகிய இரண்டு விக்கெட் கீப்பராக இருக்கும் காரணத்தால் தென்னாபிரிக்காவை சேர்ந்த வீரர் க்விண்டன் டி காக் பேட்ஸ்மேனாக மட்டும் பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் மட்டுமே ஒரு வீரரை வாங்கியுள்ளது. பெங்களூர் அணி டி காக்கை விடுவித்துள்ளது. வேறு எந்த வீரரையும் வாங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்