எனது சிறப்பான ஆட்டத்துக்கு இவரே காரணம்! கலீல் அகமது நெகிழ்ச்சி

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

எனது சிறப்பான பந்துவீச்சுக்கு முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர்கானே காரணம் என தெரிவித்துள்ளார் இந்திய அணி வீரரான கலீல் அகமது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றுமு் 272 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், கலீல் அகமதுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆசிய கிண்ணப் போட்டியில் அறிமுகமான போது எனக்கு பதட்டமும், அழுத்தமும் இருந்தது.

இருந்தாலும் சிறப்பாக செயல்பட்டதாக கருதுகிறேன், இதற்கு காரணம் முன்னாள் வீரர் ஜாகிர் கானே.

டெல்லி அணியில் இருந்த போது அவரிடமிருந்து நிறைய ஆலோசனைகளை பெற்றேன்.

வெவ்வேறு சூழலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அவர் தான் கற்றுக்கொடுத்தார் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்