பவுன்சர்கள் போட்டு வம்பிழுத்த சிராஜ்க்கு தக்க பதிலடி கொடுத்த ப்ரித்வி ஷா

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

விஜய் ஹசாரே தொடரின் ஒரு போட்டியில் தொடர்ந்து பவுன்சர்களாக வீசி சிராஜ் வம்புக்கு இழுக்க, அதனை எதிர்கொண்ட ப்ரித்வி ஷா சிக்ஸர் விளாசி பதில் கூறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது.

இந்தத் தொடரில் 18 வயதே ஆன இளம் வீரர் ப்ரித்வி ஷா அறிமுகமானார். முதல் போட்டியிலேயே சதம் அடித்த அவர், மொத்தம் 237 ஓட்டங்கள் குவித்து தொடர் நாயகன் விருதை பெற்று கவனத்தை ஈர்க்க வைத்தார்.

சிறிய வயதிலேயே அவரது துடுப்பாட்டம் அபாரமாக உள்ளதாக முன்னாள் வீரர்கள் பலர் கூறியிருந்தனர்.

இந்நிலையில், தற்போது மும்பை அணிக்காக விளையாடி வரும் ப்ரித்வி ஷா, ஹைத்ராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிராஜ் வீசிய பந்தை எதிர்கொண்ட விதம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

ஆட்டத்தின் 19-வது ஓவரை வீசிய முகம்மது சிராஜ், பவுன்சர்களாக வீசித் தாக்கினர். முதல் இரண்டு பந்துகளை சமாளித்த ப்ரித்வி ஷா, மூன்றாவது பவுன்சரில் சற்று நிலை குலைந்தார்.

அப்போது, சிராஜ் ஏதோ கூற, பதிலுக்கு ப்ரித்வியும் ஏதோ பதிலளிக்க வாக்குவாதம் ஏற்பட்டது.

சிராஜ் வீசிய அடுத்த மூன்று பந்தில், முதலிரண்டை சிக்சருக்கு அனுப்பிய பிரித்திவி, கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ப்ரித்வியின் இந்த அதிரடியை எதிர்பார்க்காத சிராஜ் ஏமாற்றம் அடைந்தார்.

தற்போது இந்த காணொளி காட்சியானது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்