பாகிஸ்தான் வீரரை மிரண்டு போக வைத்த அவுஸ்திரேலியா வீரர்: அபாரமாக காலில் கேட்ச் பிடித்து அசத்திய வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, அவுஸ்திரேலியா வீரர் மார்னஸ் அபராமாக பிடித்த கேட்ச் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்ததையடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெற்றது.

இதில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 282 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா அணி 145 ஓட்டங்களும் எடுத்தது.

அதன் பின் 137 ஓட்டங்கள் முன்னிலையுடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்கள் எடுத்து, 281 ஓட்டங்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி விளையாடிக் கொண்டிருந்த போது, துவக்க வீரர் முகமது ஹபீஸ் அடித்த பந்தை, அவுஸ்திரேலியா வீரர் மார்னஸ் அற்புதமாக கேட்ச் பிடித்து மிரட்டினார்.

அதாவது மிட்செல் ஸ்டார்க் வீசிய மூன்றாவது ஓவரின் கடைசி பந்தை ஹபீஸ் அடிக்க, ஷார்ட் லெக் திசையில் ஸ்லிப்பில் நின்ற மார்னஸின் இடது தொடையில் அடித்து பந்து கீழே விழப்போகும் நேரத்தில் வலது காலில் பட்டது.

பின்னர் சுதாரித்த இரண்டு கால்களையும் சேர்த்து வைத்து பந்தை பிடித்துவிட்டார். கையில் தான் கேட்ச் பிடித்து பார்த்திருப்போம். ஆனால் மார்னஸ் கால்களிலேயே பிடித்த கேட்ச் அந்நாட்டு ரசிகர்கள் டிரண்டாக்கி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...