அடில் ரஷித் அபாரம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
269Shares

இலங்கை - இங்கிலாந்து இடையிலான 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 2-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

தம்புல்லாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவிற்கு வந்தது. 2-வது போட்டியில் மழை பாதித்தாலும் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையே பல்லேகலே மைதானத்தில் மூன்றாவது போட்டி பகல் - இரவு ஆட்டமாக நடைபெற்றது. மழையால் ஆட்டம் 21 ஓவராக குறைக்கப்பட்டது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. இலங்கை அணி சார்பில் நிரோஷன் டிக்வெலாவும், சதிரா சமரவிக்ரமா தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்

முதல் விக்கெட்டுக்கு 57 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் டிக்வெலா 36 ஓட்டங்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து, சதிராவும் 35 ஓட்டங்களில் வெளியேறினார்.

அடுத்து இறங்கிய வீரர்கள் நீடித்து நிலைக்கவில்லை. இதனால் இலங்கை அணி நிர்ணயம் செய்யப்பட்ட 21 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்கள் எடுத்தது.

இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித் 4 விக்கெட்டும், டாம் கர்ரன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 151 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் அதிரடி காட்டி 26 பந்தில் 41 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார். அணித்தலைவர் இயன் மார்கன் சிறப்பாக ஆடி அரை சதமடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

அவருக்கு பென் ஸ்டோக்ஸ் ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அத்துடன், தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் விருது அடில் ரஷித்துக்கு வழங்கப்பட்டது.

இரு அணிகளுக்கு இடையிலான 4-வது ஆட்டம் எதிர்வரும் 20-ம் திகதி பல்லேகலே மைதானத்தில் நடக்கிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்