பாகிஸ்தான் அணியுடன் மிகவும் மோசமான தோல்வி! ஆனால் கோஹ்லி-யுவராஜ் சிங் எதற்காக அப்படி சிரித்தார்கள் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தோல்வியுற்ற போதிலும், ஷோயிப் மாலிக் சொன்னதைக் கேட்டே கோஹ்லி, யுவராஜ் சிங் சிரித்துள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியுடன் தோல்வியை சந்தித்தது.

இதனால் இந்திய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்த போது, போட்டி முடிந்த பின்பு கோஹ்லி, யுவராஜ் சிங், ஷோயிப் மாலிக் ஆகியோர் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தனர்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி இந்திய ரசிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அன்று ஏன் நாங்கள் அப்படி சிரித்தோம் என்பதற்கு மாலிக் விளக்கமளித்துள்ளார். அதில், இதே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான போட்டியின் போது, கெய்ல் எங்கள் பந்து வீச்சை அடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது கெய்லுக்கு கேட்ச் விடப்பட்டது. நல்ல பொசிஷனில் சயீத் அஜ்மல் கேட்ச் எடுக்கும் நிலையில் கடைசி நொடியில் பந்திலிருந்து விலகினார்.

நான் அப்போது அஜ்மலிடம் ஏன் கேட்ச் பிடிக்கிற மாதிரி வந்து ஏன் பின்னர் விலகினாய் என்று கேட்ட போது, நான் கேட்சை விட்டால் பிடிக்கலாம் என்று குனிந்தபடி காத்திருந்ததாகத் தெரிவித்தார்.

கெய்லுக்கு கேட்ச் விட்ட இந்தச் சம்பவத்தைத்தான் இந்திய வீரர்கள் கோலி, யுவராஜ் சிங் ஆகியோருடன் அளவாளவி சிரித்துக் கொண்டிருதோம் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்