ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் நார்த்தென் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணியும், போர்ட் அடிலெய்ட் அணியும் மோதி 571 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டிஸ்டிரிக்ட்ஸ் அணி சாதனைப்படைத்துள்ளது.
முதலில் நார்த்தென் டிஸ்டிரிக்ட்ஸ் அணி டாஸ் வென்று அதிரடியாக களமிறங்கியது.
இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதமடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 249 ரன்களும் மெக் பர்லின் 80 பந்துகளில் 136 ரன்களும், சாவில் 56 பந்துகளில் 120 ரன்களும் எடுத்து அவுட்டாகினர் பின் வந்த பெட்சும், பிரவுனும் 288 ரன்களும் நார்த்தென் டிஸ்டிரிக்ட்ஸ் அணி 50 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 596 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில் பெட்ஸ் 71 பந்துகளில் 124 ரன்னும், பிரவுன் 84 பந்தில் 117 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். எக்ஸ்டிராவாக 88 ரன்கள் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, 597 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு போர்ட் அடிலெய்டு அணி களமிறங்கியது.
மேலும் நார்த்தெர்ன் அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி 25 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நார்த்தென் டிஸ்டிரிக்ட்ஸ் அணி 571 ரன்கள் வித்தியாசத்தில் போர்ட் அடிலெய்டு அணியை வீழ்த்தி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.