டோனி சீக்கிரம் வீட்டுக்கு போக வேண்டிய நிலைமை ஏற்படும்! எச்சரிக்கும் முன்னாள் இந்திய வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி, அனைத்திலும் சிறப்பாக செயல்பட்ட போதிலும், துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தாத காரணத்தினால் அவர் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

ஆசியகோப்பை தொடரில் கோஹ்லி இல்லாத இந்திய அணியை ரோகித் சிறப்பாக வழி நடத்தி கோப்பை வென்று கொடுத்தார். இந்திய அணிக்கு இவர் கோப்பை வென்று கொடுத்தாலும், இந்த தொடரின் சில போட்டிகளில் டோனியின் உதவி அவருக்கு தேவைப்பட்டது என்றே கூறலாம்.

கீப்பிங்கில் மின்னல் வேக ஸ்டெம்பிங், பந்து வீச்சாளர்களை சிறப்பாக வழிநடத்தியது, டி.ஆர்.எஸ் முடிவை துல்லியமாக கணிப்பது என இந்த தொடரில் ஜொலித்தார்.

ஆனால் துடுப்பாட்டத்தில் மட்டும், பழைய டோனியை பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் இந்திய ரசிகர்களுக்கு இருக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வெங்கடேஷ் பிரசாத், ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு கோப்பை வென்றது.

ஆனால் இந்திய அணியின் துடுப்பாட்டம் அந்தளவிற்கு இல்லை என்று தான் கூறுவேன். குறிப்பாக 4 மற்றும் 6 வது இடத்தில் எந்த துடுப்பட்ட வீரரும் கெட்டியாக பிடித்துக்கொள்ளும் அளவுக்கு இல்லை.

தோனி, தனது துடுப்பாட்ட இடத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால், அவரின் வயதுக்கு விரைவில் வீட்டுக்கு செல்லும் நிலை ஏற்படும்.

ஏனெனில் இளம் பண்ட் அவர் இடத்தை பிடிக்க தயாராக காத்துக்கொண்டுள்ளார். பண்ட் காத்துக்கொண்டிருந்த போதும், கீப்பிங் நுணுக்கத்தில் டோனியை அவரால் மிஞ்ச முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers