ஆசிய கிண்ண தொடரில் ரன் வேட்டை: தரவரிசையில் 2-ஆம் இடம் பிடித்த ரோஹித் ஷர்மா

Report Print Kabilan in கிரிக்கெட்

ஆசிய கிண்ண தொடரில் 317 ஓட்டங்கள் குவித்ததன் மூலம், இந்திய துடுப்பாட்ட வீரர் ரோஹித் ஷர்மா ஒருநாள் தரவரிசையில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

துபாய் மற்றும் அபுதாபியில், ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய அணிக்கு தலைவராக செயல்பட்ட ரோஹித் ஷர்மா, கிண்ணத்தையும் வென்று கொடுத்தார்.

அத்துடன், 5 இன்னிங்சில் விளையாடிய ரோஹித் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதத்துடன் 317 ஓட்டங்கள் குவித்தார். இதன்மூலம், ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அதேபோல் 342 ஓட்டங்கள் குவித்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், நான்கு இடங்கள் முன்னேறி 5வது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோஹ்லி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

பந்துவீச்சாளர்களில் இந்திய வீரர் பும்ரா முதல் இடத்திலும், ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் 2வது இடத்திலும், இந்திய வீரர் குல்தீப் யாதவ் 3வது இடத்திலும் உள்ளனர். அதே போல் ஆல்-ரவுண்டர் தரவரிசையிலும் ரஷீத் கான் முதலிடம் பிடித்துள்ளார்.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...