வீரர்கள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: விதிகளை கடுமையாக்கிய ஐசிசி

Report Print Kabilan in கிரிக்கெட்

கிரிக்கெட்டில் தற்போது உள்ள விதிமுறைகளை ஐ.சி.சி கடுமையாக்கியுள்ளது.

ஐ.சி.சி கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகம் செய்த டக்வொர்த் லீவிஸ் முறையில் மாற்றங்களை செய்துள்ளது.

இந்த மாற்றங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த சுமார் 700 ஒருநாள் போட்டிகள், 428 டி20 போட்டிகளின் தரவுகளை கொண்டு, சுமார் 2,40,000 முடிவுகளை கணக்கில் கொண்டு இந்த முறை மேம்படுத்தப்பட்டுள்ளதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

  • பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள் சிக்கியபோது, அதன் தண்டனை அதிகரிக்கப்பட்டது. தற்போது அது மூன்றாம் நிலை குற்றமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தண்டனையும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் பந்து சேதம் தவிர்த்து போட்டியில் தவறான முறையில் ஆதாயம் மற்றும் அனுகூலம் பெறுவது, தனிப்பட்ட நபரை தாக்கிப் பேசுதல், மைக்கில் கேட்கும் படி மோசமான வார்த்தைகளில் பேசுதல், நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தல் போன்றவை குற்றங்களாக இனி கருதப்படும் என்றும் ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
  • அதே போல், மூன்றாம் நிலை குற்றத்திற்கு இருந்த 8 தடைப் புள்ளிகள், தற்போது 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 6 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 12 ஒருநாள் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிகள், தென் ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் ஒருநாள் போட்டியில் இருந்து அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers