இந்த விஷயத்தில் நான் டோனியைப் போன்று தான் இருப்பேன்! அதிரடி மன்னன் ரோகித்சர்மா

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணிக்கு ஆசியகோப்பை பெற்றுத்தந்த ரோகித் சர்மா களத்தில் இறங்கிவிட்டால் நான் டோனியைப் போன்று டென்ஷன் இல்லாமல் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

துபாயில் நடைபெற்று முடிந்த ஆசியகோப்பை தொடரை இந்திய அணி வென்று சாதனை படைத்தது.

சிறப்பாக இந்திய அணியை வழிநடத்திச் சென்ற அந்தணியின் தலைவர் ரோகித்சர்மாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்ந தொடரில் ரோகித்சர்மா எந்த ஒரு பதற்றமும் இல்லாமல், மிகவும் கூலாக தலைவர் பதவி செய்ததை காண முடிந்தது.

இது குறித்து அவரிடம் கேட்ட போது, நான் டோனி மாதிரி. களத்துக்கு வந்துவிட்டால் கூலாக தலைவர் பொறுப்பை செய்வேன். எல்லாம் டோனியிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்.

அவருடன் இத்தனை ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். டோனி ஒருமுறை கூட தலைவர் பொறுப்பில் இருக்கும் போது பதற்றத்தை முகத்தில் காட்டியதே இல்லை.

பதற்றமான முடிவுகளை எடுத்ததே இல்லை. அவரைப் பார்த்துதான் நானும் தலைவர் பணியைச் செய்தேன். அவரின் கேப்டன்ஷிப் பண்புகள் என்னிடமும் இருக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் டோனியிடமிருந்து ஒவ்வொரு முறையும் ஏதாவது கற்றுக்கொண்டே இருக்கிறோம். ஏனென்றால், அந்த அளவுக்குச் சிறந்த தலைவராக இருந்திருக்கிறார்.

களத்தில் எனக்கு எப்போதெல்லாம் சந்தேகம் வருகிறதோ அப்போதெல்லாம் பதில் அளிக்க டோனி தயாராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers