ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் வெடித்த சர்ச்சை! கொந்தளிக்கும் வங்கதேச ரசிகர்கள்

Report Print Kabilan in கிரிக்கெட்

ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில், வங்கதேச வீரர் லிதான் தாஸிற்கு கொடுக்கப்பட்ட அவுட் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதின. இப்போட்டியில் வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் லிதான் தாஸ் 121 ஓட்டங்களில் ஆடிக்கொண்டிருந்தபோது, குல்தீப் பந்து வீச்சில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.

அவருக்கு அவுட் வழங்கப்பட்டது. ஆனால் மூன்றாவது நடுவரால், பல முறை பல கோணங்களில் பார்த்தும் அவுட் என்று உறுதியாக கூற முடியவில்லை. அதே போல் இந்த விக்கெட்டை திரையில் பார்த்த வர்ணனையாளரும், முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரமிஸ் ராஜா இது அவுட் இல்லை என்று கூறினார்.

இதனால், லிதான் தாஸின் விக்கெட் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரது கால் எல்லைக் கோட்டுக்குள் இருப்பதை ஒரு கோணம் உணர்த்தியதால், அவருக்கு தவறாக அவுட் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த காட்சியைப் பார்த்த வங்கதேச ரசிகர்கள் மிகுந்த கொந்தளிப்படைந்தனர். அத்துடன் பி.சி.சி.ஐ-யும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலையும் ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...