டோனியை சந்தித்த பின்பு தான் பாகிஸ்தான் ரசிகர் இப்படி ஒரு முடிவை எடுத்தாரா? வெளியான தகவல்

Report Print Santhan in கிரிக்கெட்

துபாயில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றி பெற்று 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் தீவிர ரசிகரான பசீர் தாத்தா இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து வந்து இந்திய ரசிகர்களுடன் போட்டியை ஆர்வமாக பார்த்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகரான பசீர் தாத்தா இந்திய வீரர்கள் தங்கும் ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது அவர் டோனியிடம் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.

டோனியும் இதற்கு எந்த தடையுமின்றி அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது ரோகித்சர்மாவும் தென்பட அவரிடமும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அதன் பின்னரே இறுதிப் போட்டி நடந்துள்ளது. அந்த போட்டியில் அவர் இந்திய ஜெர்சியை அணிந்து வந்ததால், டோனி மற்றும் ரோகித்தின் செய்ல்பாடு காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

பசீரின் இந்த செயலுக்கு சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers