ஆசிய கிண்ண இறுதிப்போட்டி! டோனி படைத்த சாதனை

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி, சர்வதேச கிரிக்கெட்டில் 800 பேரை ஆட்டமிழக்க செய்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

நேற்று நடந்த இந்தியா- வங்கதேசம் இடையேயான போட்டியில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி 2 ஸ்டம்பிங் செய்தார். இதன்மூலம் 800 பேரை ஆட்டமிழக்க செய்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார்.

அதே போல் சர்வதேச அளவில் மார்க் பவுச்சர், ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் 998 பேரையும், அவுஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் 905 பேரையும் ஆட்டமிழக்க செய்துள்ளனர்.

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங்குகள் (184) செய்த விக்கெட் கீப்பர்களில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

அவருக்கு அடுத்த இடங்களில் இலங்கையின் குமார் சங்ககாரா (139) மற்றும் ரோமேஷ் கலுவிதரனா (101) ஆகியோர் உள்ளனர்.

மகேந்திர டோனி இதுவரை 90 டெஸ்ட்களில் 256 கேட்சுகள், 38 ஸ்டம்பிங் செய்துள்ளார். 327 ஒருநாள் போட்டிகளில் 306 கேட்சுகள் மற்றும் 113 ஸ்டம்பிங்குகள் செய்துள்ளார். மேலும், 93 டி20 போட்டிகளில் விளையாடி 54 கேட்சுகள், 33 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...