கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசு: ஆசிய கிண்ண வெற்றி குறித்து ரோஹித் ஷர்மா உருக்கம்

Report Print Kabilan in கிரிக்கெட்

ஆசிய கிண்ணத்தை வென்றது அணியின் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு என இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில், இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது.

இந்நிலையில், இந்த வெற்றி குறித்து இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா கூறுகையில், ‘இந்தத் தொடர் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை நாங்கள் ஆடியதற்காக, கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசு இது.

தொடர் முழுவதுமே நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம். கடைசி வரை அழுத்தத்தை சரியாக கையாண்ட அணியினருக்கு பாராட்டு போய் சேர வேண்டும். வங்கதேசம் சிறப்பாக ஆடினார்கள். எங்களுக்கு ஆரம்பத்திலேயே நெருக்கடி தந்தார்கள்.

ஆனால், பந்து சற்று சேதமானதும் எங்களால் ரன் சேர்க்க முடியும் என்று எனக்கு தெரிந்தது. அணி சிறப்பாக ஆடும்போது அணித்தலைவர் சிறப்பாக தெரிவார். ஆனால், மற்ற 10 வீரர்களின் ஆதரவின்றி எதுவும் சாத்தியமல்ல.

வந்து எங்களை ஆதரித்த ரசிகர்களுக்கும் நன்றி. முதல் போட்டியில் இருந்தே பெரிய எண்ணிக்கையில் வந்து எங்களை ஊக்குவித்தனர். இந்த அணி எப்படி இயங்குகிறது என்பது எனக்கு புரிகிறது.

எப்படி ஆடுகிறோம், அடுத்து எதை நோக்கிப் போக வேண்டும் என்பது தெரிகிறது. எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டே அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டும் என நினைக்கிறேன்.

இந்தத் தொடரில் கண்டிப்பாக எல்லா விதங்களிலும் நாங்கள் சிறப்பாக ஆடியிருக்கிறோம் என்பதை என்னால் தெளிவாக கூற முடியும்.

இதே போல தொடர்ந்து சிறப்பாக ஆடுவது தான் அடுத்து எங்களுக்கு இருக்கும் சவால். ஒரு அணியாக இன்னும் மேம்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...