கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் கோட்டை விடும் வங்கதேசம்! ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியின் சாதனை துளிகள்

Report Print Santhan in கிரிக்கெட்

துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பைத் தொடரின் நேற்றைய இறுதிப் போட்டியில் வங்கதேசம்- இந்திய அணிகள் மோதின. பலம் வாயந்த இந்திய அணி, வங்கதேச அணியிடம் திக்கி திணறி ஒருவழியாக வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஆசியக்கிண்ணத்தை 7-வது முறையாக கைப்பற்றியுள்ளது. இப்போட்டியில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.

ஆசியக்கிண்ணத்தை 7-வது முறையாக வென்றதன் மூலம் இந்திய அணி தொடர்ந்து அதிக முறை ஆசியகிண்ணத்தை வென்ற அணி என்று முதலிடத்தில் உள்ளது.

இப்போட்டியில் சதமடித்த வங்கதேச வீரர் லிட்டன் தாஸ், சரவதேசப்போட்டியில் முதன் முறையாக சதம் அடித்தார். ஆசியகிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிகளில் 3-வது அதிவேக சதம் இது ஆகும்.

முதல் தர கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் செய்த வீரர்களின் வரிசையை டோனி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார்.

3 அல்லது அதற்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்ற தொடரின் இறுதிப் போட்டிகளில் வங்கதேச அணி 6-ஆவது முறையாக கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டது.

2009-ஆம் ஆண்டு (முத்தரப்பு தொடர்) இலங்கை அணியிடம் தோல்வி, 2012 ஆசியகோப்பையில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி, 2016 ஆசியகோப்பையில் இந்திய அணியிடம் தோல்வி, 2018(முத்தரப்பு தொடர்) இலங்கைக்கு எதிராக தோல்வி, 2018 ஆசியகோப்பையில் இந்திய அணியிடம் தோல்வி.

அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த கீப்பர்களின் வரிசையில் டோனி 3-வது இடத்தை பிடித்தார். தென் ஆப்பிரிக்கா வீரர் மார்க் பெளச்சர்(998), அவுஸ்திரேலிய வீரர் ஆடம் கில் கிறிஸ்ட்(905), டோனி(800).

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...