ஆப்கானிஸ்தான் வீரர்களின் ஸ்டம்புகளை பறக்க விட்ட இலங்கை வீரர் பெரெரா! வெளியான வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

அபுதாபியில் நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணியின் திசாரா பெரெரா ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய வீடியோ வெளியாகியுள்ளது.

ஆசியக்கோப்பை தொடருக்கான நேற்றைய போட்டியில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. கட்டாய வெற்றியை நோக்கி விளையாடிய இலங்கை அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

முதல் போட்டியில் வங்கதேசம், தற்போது ஆப்கானிஸ்தான் என கத்து குட்டி அணிகளிடம் இலங்கை அணி அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளன.

வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்....

இந்நிலையில் இந்த போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான திசாரா பெரெரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் மூன்று துடுப்பாட்ட வீரர்களை தன்னுடைய துல்லியமான பந்து வீச்சின் மூலம் பெரெரா போல்டாக்கினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்