கோஹ்லி விளையாடததால் எங்களக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா? ஸ்டார் நிறுவனத்தின் வாயை அடைத்த பிசிசிஐ

Report Print Santhan in கிரிக்கெட்

ஆசியகோப்பை தொடருக்கான இந்திய அணியில் கோஹ்லி விளையாடத்தால், அதிருப்தி தெரிவித்த ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பிசிசிஐ பதிலடி கொடுத்துள்ளது.

இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகள் பங்கு பெறும் ஆசியக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் தலைவரான கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ரோகித் சர்மா அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த தொடரை ஒளிபரப்பும் ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம் ஆசியக் கோப்பையை நடத்தும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், இந்திய அணியின் தலைவரும், உலகின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரருமான கோஹ்லி களத்தில் இருக்கும் போதும், துடுப்பெடுத்தாடும் போது அதிக ரசிகர்கள் அதைப் பார்ப்பார்கள்.

இப்போது கோஹ்லி அணியில் இல்லாததால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

15 நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில், விராத் கோஹ்லி உடல் தகுதியோடு இருந்தும் எடுக்காதது ஒப்பந்தத்தை மீறும் செயல், எங்களுக்கு அளித்துள்ள ஒப்பந்தத்தில் ஆசியப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து நாடும் தங்களின் சிறந்த அணியை அனுப்பும், இதுகுறித்து பிசிசிஐ விளக்கம் அளிக்க உடனே உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த பிசிசிஐ, பிசிசிஐ சிறந்த அணியைத் தான் ஆசியக் கோப்பைக்கு அனுப்பியுள்ளது. யாரைத் தேர்வு செய்ய வேண்டும், கூடாது என ஆசிய கிரிக்கெட் கவுன்சிலோ, போட்டியை ஒளிபரப்பும் நிறுவனமோ எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறி ஸ்டார் நிறுவனத்தின் வாயை அடைத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers