இந்தியா - இலங்கை மகளிர் கிரிக்கெட் போட்டியில் மேட்ச் பிக்சிங்? வெடித்த சர்ச்சை

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

இந்தியா - இலங்கை மகளிர் கிரிக்கெட் போட்டியின் இடையே மேட்ச் பிக்சிங் நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

மகளிர் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த இந்திய பெண்கள் அணி, நேற்று 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது.

போட்டியில் இந்திய அணியின் சார்பாக கேப்டன் மிதாலிராஜ் 125 ரன்களும், இலங்கை அணியின் சார்பாக கேப்டன் அட்டப்பட்டு 115 ரன்களும் எடுத்திருந்தார்.

இந்த போட்டியின் போது பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்திருந்த 5 பேர், நீண்ட நேரமாக செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவர்கள் 5 பேரும் ஆட்டத்தின் பாதியிலேயே வெளியில் அனுப்பப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்த விளக்கம் அளித்த இலங்கை கிரிக்கெட் அதிகாரி ஒருவர், வெளியேற்றப்பட்ட 5 பேரிடமும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு வெளிநாட்டினருடன் தொடர்பு இருக்கலாம் என் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே மேட்ச் பிக்சிங் மற்றும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக பலரும் விசாரிக்கப்படுவதும், அதில் இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த நபர்களே அதிகம் குறிவைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...