ஆசிய கிண்ணத்தில் ஹொங்காங் அணியை பந்தாடிய பாகிஸ்தான்!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

துபாயில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் A பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் – ஹொங்காங் அணிகள் மோதின.

நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பெடுத்தாடிய ஹாங்காங் அணி, பாகிஸ்தான் அணியின் சிறப்பான பவுலிங்கை சமாளிக்க முடியாமல் 116 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் உஸ்மான் கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 23.4 ஓவரில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 12௦ ஓட்டங்களைப் பெற்று, வெற்றியைப் பெற்றது.

பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான, இமாம் உல் ஹசன் 5௦ ஓட்டங்களைப் பெற்று, ஆட்டமிழக்காமல் களத்தில் இறுதி வரை நின்றார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers