ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
துபாயில் நடந்துவரும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஹாங்காங் அணியை எதிர்க்கொண்டது.
முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய ஹாங்காங் அணியின் தொடக்க வீரர்களான நிசாகத் கான் 13 ஓட்டங்களிலும், அன்ஷுமன் ராத் 19 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து வந்தவர்களும் அடுத்தடுத்து வெளியேறியபடி இருந்தனர்.
இறுதியில் 35.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 116 ஓட்டங்களில் சுருண்டது.
117 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 23.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.