என்னை விட இவர்கள் தான் சிறந்த பந்துவீச்சாளர்கள்: ஜேம்ஸ் ஆண்டர்சன்

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், தன்னை விட சிறந்த வீரர்கள் இவர்கள் தான் என மெக்ராத் மற்றும் டேல் ஸ்டெயினை குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விக்கெட் வீழ்த்தியதன் மூலம், டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய மெக்ராத்தின் சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் முறியடித்தார்.

ஆண்டர்சன் 143 டெஸ்ட் போட்டிகளில் 564 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், தன்னை விட தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின், அவுஸ்திரேலியாவின் மெக்ராத் ஆகியோர் தான் சிறந்த பந்து வீச்சாளர்கள் என ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘நான் மெக்ராத்தை பற்றி சில விடங்களை உங்களுக்கு கூறியாக வேண்டும். அவர் என்னை விட சிறந்த பந்து வீச்சாளர். இது தவறான தன்னடக்கம் இல்லை’ என தெரிவித்துள்ளார்.

Getty Images
Getty Images

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers