இலங்கை அணிக்கு அடுத்தடுத்து வரும் சோதனை! முக்கிய வீரர் விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சி

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணியின் நட்சத்திர வீரரான குணதிலகே காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளதால், அந்தணி கலக்கத்தில் உள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என 6 அணிகள் பங்கேற்கும் ஆசியகோப்பை தொடர் வரும் 15-ஆம் திகதி துவங்கவுள்ளது.

இதில் முதல் போட்டியில் இலங்கை அணியும், வங்கதேச அணியும் மோதுகின்றன. இந்த தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றது.

இந்நிலையில் ஏற்கனவே காயம் காரணமாக தினேஷ் சண்டிமாலை இழந்த இலங்கை அணி தற்போது மற்றொரு நட்சத்திர வீரரான குணதிலகவை இழந்துள்ளது.

முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக குணதிலக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாகவும், அவருக்கு பதிலாக செனன் ஜெயசூர்யா ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியில் சேர்க்கப்படுவாதவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

காயம் காரணமாக அடுத்தடுத்து இரண்டு முக்கிய வீரர்களை இலங்கை அணி இழந்துள்ளது, அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers