அரையிறுதியில் ஜொலிஸ்ராரை எதிர்கொள்ளும் KCCC அணி: வெற்றி யார் பக்கம்

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

யாழ்.மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையில் 30 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுப்போட்டியொன்றை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடத்தி வருகின்றது.

இந்தச் சுற்றுப்போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டி 1 ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியை எதிர்த்து யூனியன்ஸ் அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய யூனியன்ஸ் அணி, 30 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 164 ஓட்டங்களை எடுத்தது.

தயாளன் 30, மோகன்ராஜ் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் கே.சி.சி.சி அணி சார்பாக, நிமலதாஸ் 3 விக்கெட்களையும், சத்தியன் 2, சாம்பவன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

165 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, ஏலாளசிங்கம் ஜெயரூபனின் ரூத்திரதாண்ட அதிரடிச் சதத்தின் உதவியுடன், 17.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் ஜெயரூபன் 2 சிக்ஸர்கள், 18 பவுண்டரிகள் அடங்கலாக 101 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். ஜனுதாஸ் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers