மலிங்காவின் பந்துவீச்சை சமாளிக்க 2011 உலகக் கிண்ணத்தில் இதனை செய்தோம்: ரகசியம் உடைத்த சேவாக்

Report Print Kabilan in கிரிக்கெட்

கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில், யுவாராஜ் சிங்கிற்கு முன் டோனி களமிறங்கியது ஏன் என சேவாக் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ணத் தொடரை வென்றது. அந்த தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக இந்தியா விளையாடியது.

முதலில் விளையாடிய இலங்கை அணி 274 ஓட்டங்கள் எடுத்தது. ஜெயவர்தனே 103 ஓட்டங்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் சேவாக் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும், சச்சின் 18 ஓட்டங்களிலும் அவுட் ஆகினர்.

அதன் பின்னர் கோஹ்லியும் அவுட் ஆக, இந்தியா 114 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் இருந்தது. அப்போது யுவராஜ் சிங்குக்கு பதில் டோனி களமிறங்கி 91 ஓட்டங்கள் குவித்தார்.

இந்தியாவும் அபார வெற்றி பெற்று கிண்ணத்தை வென்றது. எனினும், யுவராஜ் சிங் பார்மில் இருந்த சமயத்தில் டோனி ஏன் களம் இறங்க வேண்டும்? என்ற கேள்வி அப்போது எழுந்தது.

அதனைத் தொடர்ந்து, பயிற்சியாளர் கேரி கிரிஸ்டனின் ஆலோசனைப்படி தான் டோனி களமிறங்கியதாக தகவல் பரவியது. இந்நிலையில் தற்போது சேவாக் அந்த தகவலை மறுத்துள்ளதுடன், அன்றைய தினம் என்ன நடந்தது என்பதை தெரிவித்துள்ளார்.

சேவாக் கூறுகையில், கம்பீர் மற்றும் கோஹ்லி ஆகியோர் களத்தில் இருந்த சமயம், டோனியிடம் வீரர்கள் அறையில் இருந்த சச்சின், இடது கை வீரர் அவுட் ஆனால் இடது கை வீரர் களமிறங்கட்டும், வலது கை வீரர் அவுட் ஆனால் வலது கை வீரர் களமிறங்கட்டும் என்று கூறிவிட்டு குளிக்க சென்றுவிட்டார்.

சச்சின் இவ்வாறு கூறியதற்கு காரணம், அன்று இலங்கையின் மலிங்கா நல்ல பார்மில் இருந்தார். அவரது பந்துவீச்சை சோதிக்க வேண்டும் என்றால் இடது கை, வலது கை வீரர்கள் ஒரே நேரத்தில் களத்தில் நிற்க வேண்டும் என்பதுதான்.

அவர் கூறியது போல் வலது கை வீரரான கோலி அவுட் ஆனார். எனவே டோனி களமிறங்கினார். ஒருவேளை கம்பீர் அவுட் ஆகி இருந்தால், அன்று யுவராஜ் தான் களமிறங்கியிருப்பார் என தெரிவித்துள்ளார்.

PTI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers