கோஹ்லி வீரர்களை அரவணைத்து பேச வேண்டும்: கங்குலி அறிவுரை

Report Print Kabilan in கிரிக்கெட்

கோஹ்லி வீரர்களிடமிருந்து சிறப்பான திறமைகளை வெளியே கொண்டு வரவேண்டும் என முன்னாள் அணித்தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை, இந்திய கிரிக்கெட் அணி 4-1 என்ற கணக்கில் இழந்தது ரசிகர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், கடைசி டெஸ்டில் ரிஷப் பந்த் மற்றும் ராகுலின் ஆட்டம் சற்று ஆறுதல் அளிக்கும்படி இருந்தது. இந்த தோல்வியால் விராட் கோஹ்லியின் தலைமை அணுகுமுறையில் பல குறைகள் இருப்பதாக பலரும் அவருக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைவரான கங்குலி வீரர்களை வழிநடத்துவது, வேலை வாங்குவது தொடர்பாக கோஹ்லிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘Post mortem செய்வதை விட, திறமைகளை அங்கீகரிப்பதே இப்போது முக்கியம். புஜாரா, ரஹானே, ராகுல் ஆகியோர் இந்த தொடரில் ஆடியது முன்பை விட 10 மடங்கு மேம்பட்ட ஆட்டமாகும்.

கோஹ்லி வீரர்களிடம் இருந்து சிறப்பான திறமைகளை வெளியே கொண்டு வரவேண்டும். இது அணித்தலைவரின் பொறுப்பு.

ஒரு அணித்தலைவர் வீரர்களின் தோள் மேல் கைபோட்டு, அரவணைத்து தனக்கு வெற்றிகளைப் பெற்றுத் தருமாறு பேச வேண்டும். அப்போது ஆட்டத்திறன் தானாகவே மேம்படும்’ என தெரிவித்துள்ளார்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers