செய்தியாளர் கேட்ட கேள்வி: கொந்தளித்த விராட் கோஹ்லி

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திடம் டெஸ்ட் தொடரை இழந்தது கடும் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், விராட் கோஹ்லி செய்தியாளரிடம் கோபப்பட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி, கடைசியாக விளையாடிய டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. இதனால் இந்திய அணி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

மேலும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் அணித்தலைவர் கோஹ்லி ஆகியோரை ரசிகர்கள் கிண்டல் செய்தும் வருகின்றனர்.

முன்னதாக, இந்திய 1-3 என்ற கணக்கில் தொடரை இழந்தபோது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கடந்த 15-20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இப்போது உள்ள இந்திய அணி சிறப்பாக விளையாடி வருவதாகவும், தற்போதைய அணியே சிறந்தது எனவும் கூறினார்.

இவரது பேச்சு ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை கிளப்பியது. இந்நிலையில், நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் கோஹ்லியும், ரவி சாஸ்திரியும் கலந்துகொண்டனர்.

அப்போது ‘நீங்கள் ரவி சாஸ்திரி கூறுவது போல், இப்போது உள்ள இந்திய அணி தான் சிறந்த அணி என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?’ என செய்தியாளர் ஒருவர் கோஹ்லிடம் கேட்டார். இதனால் கோஹ்லி மிகுந்த கோபமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து, கோஹ்லி இவ்வாறு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு கோபப்பட்டது சரியா என்ற விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர் இந்த விடயத்தில் கோஹ்லிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், ‘தோல்வியடைந்த நேரத்தில் எந்த கேப்டனிடம் இப்படி கேட்டாலும் அவர் கோபப்பட தான் செய்வார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers