இலங்கை நடுவர் தர்மசேனாவின் கனவு அணியில் இடம் பிடித்த ஒரே ஒரு இந்திய வீரர்! யார் அவர் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்கள், தங்கள் கனவு அணியை வெளியிடுவது வழக்கம், அந்த வகையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய நடுவருமாக இருப்பவருமான குமார் தர்மசேனா தன்னுடைய கனவு அணியை அறிவித்துள்ளார்.

கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இலங்கை அணிக்காக ஆடியவர் தான், குமார் தர்மசேனா, 1996-ஆம் ஆண்டு உலககக்கோப்பை வென்ற இலங்கை அணியில் இவரும் இருந்தார்.

தற்போது இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் தொடரில் நடுவராக இருந்த வந்த இவர், தன்னுடைய கனவு அணியை வெளியிட்டுள்ளார்.

அதில், தொடக்க வீரர்களாக அவுஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் மற்றும் இலங்கை அணியின் ஜெயசூரியா ஆகிய இருவரையும் தெரிவு செய்துள்ளார்.

மிடில் ஆர்டரில் ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா மற்றும் குமார் சங்ககரா ஆகியோரையும் ஆல்ரவுண்டராக தென் ஆப்பிரிக்கா வீரர் ஜாக் காலிஸையும் தெரிவு செய்துள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர்களாக முரளிதரன் மற்றும் வார்னேயையும், வேகப்பந்து வீச்சுக்கு மெக்ராத் மற்றும் வாசிம் அக்ரமையும் தெரிவு செய்துள்ளார்.

குமார் தர்மசேனா தெரிவு செய்துள்ள கனவு அணி

மேத்யூ ஹைடன்(அவுஸ்திரேலியா), சானத் ஜெயசூரியா(இலங்கை), ரிக்கி பாண்டிங்(அவுஸ்திரேலியா), சச்சின் டெண்டுல்கர்(இந்தியா), பிரயன் லாரா(வெஸ்ட் இண்டீஸ்), குமார் சங்ககரா(இலங்கை), ஜாக் காலிஸ்(தென் ஆப்பிரிக்கா), வாசிம் அக்ரம்(பாகிஸ்தான்), ஷேன் வார்னே(அவுஸ்திரேலியா), முத்தையா முரளிதரன்(இலங்கை), கிளென் மெக்ராத்(அவுஸ்திரேலியா).


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers