இந்திய அணிக்கு அடி! இங்கிலாந்து அணிக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டியில் முக்கிய வீரர் சந்தேகம்

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் காயம் காரணமாக விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தமிழக வீரர் அஸ்வின், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வற்புறுத்தியன் காரணமாகவே ஆடினார்.

ஏனெனில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவரது உடல்தகுதி முழுமையாக இல்லை.

இந்நிலையில் தற்போது இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் இவர், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது.

அதே சமயம் அஸ்வினுக்கு மாற்று வீரராக ஜடேஜா களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது. ஜடேஜாவை தேர்வு செய்வது ஒரு பெரிய அணிக்கு இக்கட்டான சூழ்நிலையாக இருக்கும்.

இடது கை ஆட்டக்காரர் வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் அவ்வளவாக விளையாடிக் கொண்டிருக்கவில்லை.

இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் ஒரு ஆட்டமும் ஜடேஜா ஆடவில்லை, இந்த தொடரில் அவர் இதுவரை விளையாடவில்லை. எனவே, அஷ்வின் வெளியேறினால், இந்தியாவிற்கு ஒரு பெரிய அடியாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்