ரோகித்தைக் கண்டு பயப்படும் விராட் கோஹ்லி! கிழி கிழினு கிழிக்கும் ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவைக் கண்டு கோஹ்லி பயப்படுவதன் காரணமாகவே கோஹ்லி அவரை டெஸ்ட் போட்டியில் எடுக்க மறுக்கிறார், அவரை ஓரங்கட்டி வருகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் அந்தளவிற்கு ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை.

இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

கடந்த 2013-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்தான் ரோஹித்திற்கு அறிமுக டெஸ்ட் தொடர்.

அந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் மிடில் ஆர்டரில் இறங்கி சதமடித்தார் ரோஹித் சர்மா. அதன்பிறகு 23 போட்டிகளில் ஆடி ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார்.

மொத்தமாக இந்திய அணிக்காக 25 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 3 சதங்கள், 9 அரைசதங்களுடன் 1479 ஓட்டங்கள் அடித்துள்ளார்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தான் ரோகித் சர்மா ஆடினார். அதன் பின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியிலும் ரோஹித்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரர்கள் அந்தளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத காரணத்தினால், நான்காவது, ஐந்தாவது போட்டியில் ரோகித்திற்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதுமட்டுமின்றி ரோகித் கூட, தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரராக இறங்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

ஆனால் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இளம் வீரர் பிரித்வி ஷா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித்திற்கு அணியில் இடம் கிடைக்காததால், அவரது ரசிகர்கள், ரோஹித்திற்கு தொடர்ந்து அணியில் இடம் மறுக்கப்படுவதற்கு கோஹ்லி தான் காரணம் ரோஹித்தை கண்டு கோஹ்லி பயப்படுவதாகவும் ரோஹித்தை வேண்டுமென்றே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓரங்கட்டுவதாகவும் விமர்சித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்