டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் தான் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்: இங்கிலாந்து முன்னாள் வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஸ்வான், தற்போதைய நிலையில் டெஸ்ட் கிர்க்கெட்டில் அஸ்வின் தான் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் ஐந்து போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது.

இந்நிலையில், இங்கிலாந்தின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான கிரேம் ஸ்வான், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை புகழ்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘அஸ்வின் உலகில் சிறந்த ஆப்-ஸ்பின் சுழற்பந்து வீச்சாளர். அவரது சாதனை துணைக்கண்டத்தில் தனித்துவம் வாய்ந்ததாகும். எட்ஜ்பாஸ்டனில் அவர் பந்துவீசிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது.

அவுஸ்திரேலியாவின் நாதன் லயன், சொந்த மண்ணில் மிகச் சிறந்த வீரராக திகழ்வது என்னை கவர்ந்துள்ளது. ஆனால், அவரால் இங்கிலாந்தில் சோபிக்க முடியவில்லை. அஸ்வின் தனது வித்தைகளை பந்துவீச்சில் காட்டுவதால், லயனுக்கு முன்னால் இருக்கிறார்.

அதனால் டெஸ்டில் அஸ்வின் தான் தற்போது சிறந்த வீரர் ஆவார். ஆனால் டி20யில் ரஷித் கான் அவரை விட சிறப்பாக செயல்படுகிறார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்