விராட் கோஹ்லிக்கும் இங்கிலாந்துக்குமானது தான் இந்த போட்டி: இங்கிலாந்து சுழற்பந்துவீச்சு ஆலோசகர்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நெருங்கும் இப்போதைய ஒரே வீரர் விராட் கோஹ்லி மட்டுமே என பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்தாக் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்தியா, முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியும், மூன்றாவது போட்டியில் வெற்றியும் கண்டுள்ளது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை தொடங்க உள்ளது. இந்நிலையில், விராட் கோஹ்லி குறித்து இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகரும், பாகிஸ்தானின் முன்னாள் வீரருமான சக்லைன் முஸ்தாக் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘ஒரு துடுப்பாட்ட வீரராக சச்சின் மிகப்பெரிய வீரர். அவருடன் யாரையும் ஒப்பிட விரும்பவில்லை. ஆனால், அவர் சாதனையை நெருங்கும் இப்போதைய வீரர் விராட் கோஹ்லி மட்டுமே.

அவர் ஒவ்வொரு பந்தையும் விளையாடுகிறார். ஒவ்வொரு ஓட்டத்தையும் ஸ்கோர் ஆக்குகிறார். ஒவ்வொரு தொடரிலும் சிறப்பாக ஆடுகிறார். வெற்றிக்காக அவரது ரன் எடுக்கும் பசி ஆச்சரியமாக உள்ளது.

இப்படிப்பட்ட ரன் பசி கொண்ட ஒருவர், கண்டிப்பாக ரன் வேட்டைக்காக எதையும் செய்வார். இங்கு நடக்கும் போட்டி விராட் கோஹ்லிக்கும், இங்கிலாந்துக்குமானது தான். அவரை விரைவில் வீழ்த்திவிட்டால், இங்கிலாந்து வெற்றி பெறுவது எளிதானது.

விராட் கோஹ்லி போன்ற உலக தரமான துடுப்பாட்ட வீரர் அணியில் இருந்தால், ஒட்டுமொத்த துடுப்பாட்ட வீரர்களுக்கும் உத்வேகமாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்