இங்கிலாந்து போட்டியில் தயவு செய்து கோஹ்லி இதை மட்டும் செய்ய வேண்டாம்! சேவாக்கின் பேச்சை கேட்பாரா?

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், அப்படியே விளையாட வேண்டும் என்று சேவாக் கூறியுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால், கோஹ்லி படைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக், நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்கள் செய்யக்கூடாது ஆனால் கோஹ்லி மாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது.

மூன்றாவது போட்டியில் ஆடிய இந்திய அணி வலுவான மற்றும் சமநிலையுடன் உள்ளது. தொடக்க வீரர்கள் மற்றும் மிடில் ஆர்டர் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக ஆடுகின்றனர்.

அதேபோல் பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டிருக்கிறோம். அஷ்வினும் நல்ல பார்மில் உள்ளார். எனவே அதே அணியுடன் நான்காவது போட்டியில் ஆடலாம் என சேவாக் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்