இரண்டாவது பந்திலே இங்கிலாந்து அணிக்கு பீதியை கிளப்பியது எப்படி? இந்திய அணியின் இளம் வீரர் ரிசப் பாண்ட்

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், தான் சந்தித்த இரண்டாவது பந்திலே சிக்ஸர் அடித்தது எப்படி என்பது குறித்து இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பாண்ட் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் சொதப்பியதால், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இளம் வீரர் ரிஷப் பாண்ட் தெரிவு செய்யப்பட்டார்.

இதையடுத்து மூன்றாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய ரிஷப் பாண்ட் தான் சந்தித்த இரண்டாவது பந்திலே சிக்ஸர் அடித்து இங்கிலாந்து வீரர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

இப்படி அறிமுக டெஸ்ட் போட்டியில் எந்த ஒரு பயமும் இன்றி, இரண்டாவது பந்திலே சிக்ஸர் அடித்த ரிஷப் பாண்டிற்கு பாராட்டுக்களும் குவிந்தன.

இந்நிலையில் இது குறித்து ரிஷப் பாண்ட் கூறுகையில், தூக்கி அடிப்பதற்கு சரியாக பந்து வரும் பட்சத்தில் அதனை சிக்ஸருக்கு விரட்ட தயங்க கூடாது.

முதல் பந்தாக இருந்தாலும் அப்படி தான் விளையாடி இருப்பேன். என்னை நோக்கி வந்த அந்த பந்தை சரியாக கணித்து நிதானமாகவே அந்த ஷாட்டை அடித்தேன்.

இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது போட்டியில் பும்ராஹ், அஸ்வின், ஹர்திக் பாண்டியா போன்ற சீனியர் வீரர்கள் பலர் அபாரமாக விளையாடினர் இதன் காரணமாகவே எங்களால் எளிதாக வெற்றி பெற முடிந்தது. அடுத்தடுத்த போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல முயற்சிப்போம் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்