புதிதாக இணையும் இந்திய வீரர்களுக்கு கடும் பயிற்சி

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

இங்கிலாந்து சென்றுள்ள பிருத்வி ஷா மற்றும் ஹனுமா விஹாரி இந்திய வீரர்களுடன் இணைந்து ஜிம் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதலிரண்டு போட்டிகளில் தோற்றதால் கடும் விமர்சனங்களை சந்தித்த இந்திய அணி, மாற்றங்களுடன் மூன்றாவது போட்டியில் களமிறங்கி வெற்றி பெற்றது.

அப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீராட் கோஹ்லி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்காக மகாராஷ்டிராவை சேர்ந்த பிருத்வி ஷா மற்றும் காக்கிநாடாவை சேர்ந்த ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டனர்.

இவர்கள் நேற்று முன்தினம் இங்கிலாந்து சென்ற நிலையில், இந்திய வீரர்களுடன் இணைந்து ஜிம் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.

இருப்பினும் ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான் என்றும், அப்படி கிடைத்தாலும் யாராவது ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...