'அவன் தான் எதிர்கால இந்தியா' சச்சினால் அப்போதே கணிக்கப்பட்ட இளம் வீரர்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான 4வது மற்றும் 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள ப்ரித்வி ஷா-வின் துடுப்பாட்டம் பற்றி, பத்து வருடங்களுக்கு முன்பாகவே சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான 4வது மற்றும் 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முரளி விஜய், குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, இளம் வீரர்களான ப்ரித்வி ஷா மற்றும் ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த ப்ரித்வி ஷாவின் அபாரமான ஆட்டத்தை, பலரும் சச்சினுடன் ஒப்பிட்டு வருகின்றனர். தற்போது சச்சினே அதுபற்றி தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், பயிற்சியாளர்கள் உனது துடுப்பாட்ட ஸ்டைல், பந்து வீச்சை எதிர்கொள்ளும் போது நிலையெடுக்கும் உத்தி ஆகியவற்றை மாற்றுமாறு உன்னிடம் சொன்னால், ஒரு போதும் மாற்றிக் கொள்ளாதே என்று நான் ஷாவிடம் ஏற்கெனவே அறிவுரை வழங்கியுள்ளேன்.

பயிற்சியாளர் மூலம் கற்பது நல்லதுதான். ஆனால், அதிகப்படியான கோச்சிங் பயனளிக்காது.

இவரைப் போன்ற ஒரு ஸ்பெஷல் பிளேயரைப் பார்க்கும் போது எதையும் மாற்றிக் கொள்ளக் கூடாது என்பது முக்கியம். ஒரு முழுமையான பேக்கேஜ் என்பது கடவுளின் வரப்பிரசாதம்.

10 ஆண்டுகளுக்கு முன்பாக பிரித்வி பேட் செய்வதைப் பார்க்குமாறு நண்பர்கள் வற்புறுத்தினர். அவர் ஆட்டத்தைப் பார்த்து ஆலோசனை வழங்குமாறு கேட்டனர்.

நான் பிரித்வியிடம் பேசினேன், அவர் ஆட்டத்தை மேம்படுத்துவது பற்றி ஆலோசனை வழங்கினேன், என்றார் டெண்டுல்கர்.

பின்னர் நண்பர் ஒருவரிடம், “அந்த சிறுவன் ஆடுவதைப் பார்த்தீர்களா? அவர் இந்தியாவின் எதிர்கால வீரர்” என்று கூறியுள்ளார் சச்சின்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers