கோஹ்லியின் சாதனையை தூக்கி சாப்பிட வந்த இளம் வீரர்! ஹனுமா விஹாரி இந்திய அணியில் சேர்க்கப்பட்ட ரகசியம்

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் இளம் வீரர் ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது மற்றும் 5-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடிய முரளி விஜய், 4 இன்னிங்ஸில் வெறும் 26 ஓட்டங்கள் மட்டும் எடுத்தார்.

இவர் இப்படி என்றால் இரண்டாவது டெஸ்டில் சேர்க்கப்பட்ட குல்தீப் யாதவ் 9 ஓவர்கள் வீசி 44 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

இந்த இரண்டு வீரர்களும் சொதப்பியதன் காரணமாக அவர்களுக்கு பதிலாக பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி அணியில் சேர்க்கப்பட்டனர்.

ஆந்திராவைச் சேர்ந்தவரான ஹனுமா விஹாரி குறைந்த பட்சம் 50 முதல் தர கிரிக்கெட் போட்டிகள் விளையாடிய சமகால கிரிக்கெட் வீரர்கள் செய்யாத சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.

முதல் தர கிரிக்கெட்டில் சராசரி 59.79 ஓட்டங்கள் வைத்துள்ளார். அதுமட்டுமின்றி 19 சதங்களும், 41 அரை சதங்களும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளாசியுள்ளார்.

கோஹ்லி கூட முதல் தர கிரிக்கெட்டில் ஹனுமா விஹாரியின் சாதனையைப் படைக்கததால், அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு ஹனுமா விஹாரியை இந்திய டெஸ்ட் அணிக்கு அழைத்ததற்கு ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers