அவுஸ்திரேலிய மண்ணில் களமிறங்கும் இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் பட்லர்

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணி வீரர்களான ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும், அவுஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பிக் பாஷ் டி20 தொடரில் விளையாட உள்ளனர்.

இங்கிலாந்தின் டெஸ்ட் அணியில் விளையாடும் முன்னணி வீரர்கள், பொதுவாக வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் பங்கேற்பது கிடையாது.

ஆனால், தற்போது இங்கிலாந்து வீரர்கள் பலர் வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உதாரணமாக இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் 10-க்கும் மேற்பட்ட இங்கிலாந்து வீரர்கள் விளையாடினர்.

எனினும், இங்கிலாந்தின் தற்போதைய டெஸ்ட் அணித்தலைவரான ஜோ ரூட்டை, ஐ.பி.எல் ஏலத்தில் எந்த அணியும் வாங்கவில்லை.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் நடைபெற உள்ள 2018-19ஆம் ஆண்டு சீசனில் ஜோ ரூட் விளையாட உள்ளார்.

இந்தியாவில் ஐ.பி.எல் போல அவுஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் மிகவும் பிரபலமானது. இந்த லீக் தொடரில் விளையாடும் சிட்னி தண்டர் அணி ஜோ ரூட்டை ஒப்பந்தம் செய்துள்ளது. அத்துடன் மற்றொரு இங்கிலாந்து வீரரான ஜோஸ் பட்லரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Reuters

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...