பட்லர் சிக்ஸர் அடிக்கப்பார்கிறார் அஸ்வின்..கவனமா இருங்க பாய்ஸ்! கோஹ்லி பேசிய மைக் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் போது கோஹ்லி பேசிய சில விடயங்கள் மைக்கில் பதிவாகியிருந்ததால், தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி1-2 என்ற நிலையில் பின் தங்கியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியின் இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் கோஹ்லி பேசியது ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவாகியுள்ளது.

வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...

அதில் அஸ்வின் படலருக்கு பந்து வீசும் போது, கோஹ்லி இவர் சிக்ஸர் அடிக்கப் பார்கிறார் பாய்ஸ் கவனமாக இருங்க, அருமையாக பந்து போடுற அஸ்வின். ஏதாவது நிகழச் செய், பந்து பிட்சில் நன்றாக சுழன்றதால், கோஹ்லி அங்கேயே போடு, அங்க ஒரு மண் திட்டு இருக்கு அதுல போடு கமான், கமான் என்று கூறுகிறார்.

அதன் பின் ஷமி பவுலிங் வீச வந்த போது, மற்றொரு துடுப்பாட்ட வீரராக இருந்த பிராட் பந்தை தடுத்தார், கமான் ஷாமோ என்று கோஹ்லி கூறி அதைத் தொடர்ந்து பிராட்டை நோக்கியும் ஏதோ கூறினார்.

அதற்கு பிராட், இது ஆக்ரோசமானது என்று கூற, அதற்கு கோஹ்லி மீண்டும் இளம் வீரர்களை எதிர்கொண்டால் உங்களுக்கு இது தான் நடக்கும் என்று கூறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்