டோனி நல்லவரா? கெட்டவரா? சாக்‌ஷி கேட்ட கேள்விக்கு மகள் ஜிவா சொன்ன ஆச்சரிய பதில்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதால், அவர் தற்போது ஓய்வில் உள்ளார். ஓய்வு எடுக்கும் சமயத்தில் டோனி தன் மகள் ஜீவாவிடம் அதிக நேரம் செலவிடுவார்.

டோனியும், மகள் ஜீவாவும் செய்யும் குறும்புத்தனமான வீடியோக்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வந்து கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் டோனி ஜிவாவுடன் விளையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் சாக்‌ஷி ஜிவாவை அழைத்து அப்பா நல்லவரா? கெட்டவரா என கேட்கிறார்.

Very smart

A post shared by M S Dhoni (@mahi7781) on

அப்போது ஜிவா சற்றும் யோசிக்காமல் அப்பா மட்டுமின்றி எல்லோருமே நல்லவர்கள் என்று பதிலளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

அந்த வீடியோ டோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததால், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...