எதிரியை அவங்க இடத்தில் வைத்து அடிக்கிறது தான் நாங்க! இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி

Report Print Santhan in கிரிக்கெட்

எங்களால் உலகின் எந்த அணியையும் அவர்களது இடத்தில் வைத்தே வீழ்த்த முடியும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

இதையடுத்து இங்கிலாந்து வீரர்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அதனால் இந்திய அணி தொடரை வெல்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் முன்னணி வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற கோஹ்லி தனக்கு கிடைத்த மது பாட்டிலை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு பரிசளித்துள்ளார்.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடர் குறித்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில், எங்களால் உலகின் எந்த அணியையும் அவர்களது இடத்தில் வைத்தே வீழ்த்த முடியும்.

அதேநேரத்தில் எந்த அணியும் இந்தியாவிற்கு வந்து எங்கள் அணியை வீழ்த்த முடியாது. நாங்கள் இந்தியாவிற்கு வெளியே வெளிநாடுகளில் சென்று வெற்றிகளை குவிக்க விரும்புகிறோம். எங்கள் அணி உலகின் மிகச்சிறந்த டிராவலிங் அணி என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers